மனோகணேசனிடம் அரசியல் கைதிகள் அடைக்கலம்!


அரசியல் கைதிகள் விவகாரத்தில் முற்றாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையினை அனைத்து தரப்புக்களும் இழந்துள்ளன.

இந்நிலையில் அரசியல் கைதிகளது விடுதலைக்காக பொதுமன்னிப்பொன்றின் மூலமோ அல்லது புனர்வாழ்வு பொறிமுறையினூடாகவோ தமது விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்க அரசியல் கைதிகள் அரச அமைச்சர் மனோகணேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் கைதி தேவதாசனின் உண்ணாவிரதம் ஒருபுறம் தொடர்கின்ற நிலையில் இக்கோரிக்கையினை முன் வைத்துள்ள அவர்கள் அமைச்சரது அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்யும் முயற்சியை கைவிடவேண்டாமெனவும் கோரியுள்ளனர்.

அரசியல் கைதிகளது விடுதலையினை கூட்டமைப்பு கைவிட்டுள்ள நிலையில் அரச அமைச்சர் மனோகணேசனிடம் தற்போது அடைக்கலம் புகுந்துள்ளனர். 
  

No comments