புவிவட்டப் பாதையில் நிறுத்தப்பட்டது சந்திரயான்-2; சூரியனுக்கும் தயார்!

நிலவில் ஆய்வை மேற்கொள்ளும் நோக்கில் இந்தியாவின்  சந்திரயான்-2  ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து  இன்று பிற்பகல்  இஸ்ரோ விஞ்ஞானிகளினால்  2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

அதேவேளை சூரியனுக்கு மிக நெருக்கமாக சென்று அதன் வெளிவிட்டத்தில்  பரப்பளவில் அகன்று, விரிந்து கிடக்கும் வீரியமிக்க ’கொரோனா’ எனப்படும் ‘பிளாஸ்மா’ கதிர்களைப் பற்றி துல்லியமாக ஆராய்ச்சி செய்ய ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது என்றும்  இதற்காக ‘ஆதித்யா-எல்1’ விண்கலம் அடுத்த ஆண்டின் ஜூன் மாதத்துக்குள் தயாரித்து  விண்ணில் செலுத்தப்படலாம் எனவும் இஸ்ரோவிஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments