மட்டு. மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி!தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மாவட்ட பணிமனையை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் இன்று திங்கட் கிழமை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இல.57/1, சோமசுந்தரம் சதுக்கம், மாமாங்கம், மட்டக்களப்பு எனும் முகவரியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை இன்று திங்கட் கிழமை நண்பகல் 12.30 மணியளவில் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைத்து மாவட்ட பணிமனை பெயர் பலகையையும் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றிருந்த இந்நிகழ்வில் நிர்வாக இணை உப செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எஸ்.சோமசுந்தரம், பொருளாளரும் பொருளாதார விவகாரங்களுக்கான உப செயலாளருமான பேராசிரியர் வி.பி.சிவநாதன், நிர்வாக இணை உப செயலாளர் ஆ.ஆலாலசுந்தரம், சட்ட விவகாரங்களுக்கான உப செயலாளர் திருமதி ரூபா சுரேந்திரன், மகளிர் அணி உப செயலாளர் திருமதி இளவேந்தி நிர்மலராஜ், ஊடகம் மற்றும் செயற்றிட்ட ஆக்கங்களுக்கான உப செயலாளர் த.சிற்பரன், தொகுதி அமைப்பாளர் இரா.மயூதரன், இளைஞர் அணி அமைப்பாளர் கே.கிருஸ்ணமீனன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் செ.சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், கணக்காளர் ராஜா துரைசிங்கம் மற்றும் ஊடக உதவியாளர் சதீஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.

மட்டு. மாவட்ட பணிமனைக்கு அண்மையாக அமர்ந்திருந்து அருளாசிகளை வழங்கிக்கொண்டிருக்கும் மாமாங்கேசுவரப் பிள்ளையார் ஆலயத்தின் கொடியேற்ற திருவிழாவிற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டதன் பின்னர் மாவட்ட பணிமனையை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மாமாங்கம் பகுதி மக்களுடனான சந்திப்பும் இடம்பெற்றிருதது.

No comments