சஜித்தா ரணிலா! மோதல் உக்கிரம்?


கட்சியின் உறுப்பினர்களிடையே தனது கருத்தை வெளியிட்டமைக்காக தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எமது கட்சியின் தலைவர் உத்தரவிட்டிருக்க மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் சிரேஸ்ட உறுப்பினருமான அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் அண்மையில் நடைபெற்றது. இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயரை அமைச்சர் கபீர் ஹாசிம் முன்மொழிந்திருந்தார்.
வேட்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு பெயரிட வேண்டுமானால், அதற்கொன்று கட்சியின் ஒழுங்குமுறையொன்று இருக்கின்றது. அதனை மீறி கட்சியின் சார்பில் ஒருவரை பிரேரித்தமை ஓழுங்கீனமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான கருத்தைக் கொண்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க,  இதற்காக அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை நடாத்த கட்சித் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவரிடம் வினவிய போதே அமைச்சர் கபீர் ஹாசிம் இவ்வாறு பதிலளித்திருந்தார்.   

No comments