மைத்திரி-மகிந்த மீண்டும் சந்திப்பு?


இந்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை  அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விடுத்த சந்திப்பு தொடர்பான கோரிக்கைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சாதகமான பதிலளித்துள்ளதாக அறியமுடிகின்றது.
அதன்படி, இந்த வாரம் இந்த தனிப்பட்ட சந்திப்பு இடம்பெறலாம் என, எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற கூட்டணியை உருவாக்குவது தொடர்பிலான முக்கிய தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments