38பேரை இழந்தும் தீர்வில்லை?


வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டெடுக்க போராடிவரும் உறவுகளில் அண்மைக்காலங்களில் 38 பேர் வரை மரணைத்தை தழுவியுள்ளனர்.

வடக்கு கிழக்கில் காணாமல்போனோரை கண்டறிந்து தருமாறு போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்த பின்பு இதுவரை 38 பேர் தமது உயிரை இழந்து விட்டனர். இருப்பினும் காணாமல் போன எவரும் கண்டறியப்படவில்லை.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை கனகரத்தினம் மகேஸ்வரி , பாவிலு சந்தியோகு , மரியான் சரோரூபன் , குருஸ் , கனகரத்தினம் மகேஸ்வரி
வைத்தியலிங்கம் யோகரட்ணம்,ஈஸ்வரன் உருத்திராதேவி துரைசிங்கம் ஈஸ்வரி ,சிதம்பரப்பிள்ளை யோகராசா அரசியல் கைதியான தனது கணவனை விடுதலை செய்யக்கோரி போராடிய ஆனந்தசுதாகர் யோகராணி ஆகிய 9 பேரும் சாவை தழுவியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அன்ரன் அல்பிரட் , செபநாயகம் மரியமலர் , செபஸ்ரியான்பிள்ளை ஆரோக்கியநாதன்,ச.விஜயலட்சுமி ,கோணமலை பொன்னம்பலம்,வேலு சரஸ்வதி மற்றும் செபமாலைமுத்து திரேசம்மா ஆகிய 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்திலும் சுந்தரம்பிள்ளை அருந்தவம் , தவரட்ணம் பத்மாவதி ,இராமன் கமலம் , வீரகத்தி அமிர்தலிங்கம் , சொக்கன் பரமேஸ்வரி , சுந்தரம் லெட்சுமிப்பிள்ளை ,நாகராசா சிவசோதி ஆகிய 7 உறவுகள் மரணமடைந்துள்ளனர்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பரமசிவம் தெய்வஈஸ்வரி , மகேந்திரன் உதயராணி , லவநீதன் இளவரசி , தம்பிமுத்து அமரசிங்கம் , அழகிப்போடி சந்திரசேகரம் , சந்திரசேகரம் ஞானசௌந்தரி ஆகிய 6 உறவுகள் மரணமடைந்துள்ளனர். 

அவ்வாறே அம்பாறை மாவட்டத்தில் கனகரத்தினம் காந்தமலர் , சபாரத்தினம் மனோன்மணி , தெய்வேந்திரன் இந்திரா , நாகராசா சிவமணி , சாமிதம்பி திரவியம் ஆகிய 5 பேர் சாவடைந்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கந்தையா அரியரத்தினம் , அரியதாஸ் புவனேஸ்வரி ஆகிய இரு உறவுகளும் மரணமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாசிலாமணி புஸ்பராணியும் 
மன்னார் மாவட்டத்தில் ஜசிந்தா பீரிஸ் என 38 உறவுகள் மரணமடைந்தமை தமது அமைப்பில் பதிவு செய்யப்படடுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்ப அமைப்புக்களின் இணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தமது பதிவுகளுக்குட்படாதவர்களின் எண்ணிக்கை இங்கு சுட்டிக்காட்டியதை விட அதிகமாக இருக்குமென கணிப்பிடுகின்றோம். என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான குடும்பங்களின் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments