போட்டுக்கொடுத்த பிரித்தானிய தூதர்! கடுப்பாகிப்போன டிரம்ப்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தகுதியற்றவர், பாதுகாப்பற்ற நிலையிலேயே அவர் இருக்கிறார், வெள்ளை மாளிகையில் உட்பூசல், குழப்பம் ஆகியவை நிலவுவதாக வெளியாகும் செய்திகளை டிரம்ப் மறுக்கிறார், ஆனால் அவையெல்லாம் உண்மையான செய்திகள்தான்.வெள்ளை மாளிகை செயற்படாத நிலையிலேயே இருக்கிறது. டிரம்ப் அரசு, அவமானத்தை சுமந்தபடியே முடியப்போகிறது என அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதர் கிம் டர்ரோச் பிரித்தானியாவுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது கசிந்துள்ளதால் இருநாடுகளுக்கும் இடையே பெரும் கருத்து மோதல் உருவாகியுள்ளதால் உலக அளவில் பரபரப்பை ஏற்ப்படுத்துயுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விளக்கம் அளித்துள்ள வெளியுறவு அமைச்சர்  ஜெரிமி ஹன்ட், “தூதர் தனது பணியை மட்டுமே செய்துள்ளார் என்றும் அது அவருடைய தனிப்பட்ட கருத்து தகவல் என்றும்  பிரித்தானிய அரசின் கருத்து அல்ல என்றும் இது குறித்து தூதருடன் கலந்துரையாடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரித்தானிய தூதர் கிம் டர்ரோச் விமர்சன கடிதத்தால் கொதித்துப்போன  அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலுக்கு கிம் டர்ரோச் பற்றி போட்டு தாக்கியுள்ளார்.

பிரித்தானிய தூதர், தனது நாட்டுக்கு சரியாக சேவை செய்யவில்லை எனவும்  நானோ, அமெரிக்க அரசோ அவருக்கு ரசிகர்கள் அல்ல அவரைப்  பற்றி எனக்கு எவ்வளவோ விஷயங்கள் தெரியும். ஆனால் அவற்றை சொல்ல விரும்பவில்லை இவ்வாறு கூறியுள்ளது  உலக அளவில் விவாதிக்கும் சம்பவமாக உருவாகி உள்ளதோடு இருநாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளதாக உலக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

No comments