நடிகர் சூர்யாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?-பா. ஏகலைவன்

ஏதோ ஒரு கதை ! நான்கு சண்டை நான்கு குத்துப் பாட்டு. சிகரெட் பீடி, தண்ணி , கொஞ்சம் டயலாக்.நடிச்சோமா. பணத்த வாங்கி பதுக்கினோமா.  எங்காவது இமயமலை சென்று ஓய்வெடுத்துவிட்டு வந்தோமா என்று இருந்திருக்க வேண்டும்.
அல்லது ரசிகர் மன்றத்தை உசுப்பேற்றி உசுப்பேற்றி, ஒவ்வொரு படமும் ரிலீஸாகும் போது மட்டும் 'கோட்டையை பிடிப்பேன். கொடியை ஏற்றுவேன்' என அரசியல் பேசி கல்லா கட்டியிருக்க வேண்டும்.

அதுவுமில்லையா, யாரோ ஒரு பிஜேபி காரன் வந்து தமிழக முதல்வர் நாற்காலியை பிடித்துத் தருவான் என அவர்களுக்கு ஏற்ப ஒத்து ஊதிக்  கொண்டிருந்திருக்க  வேண்டும்.!
இவைகளினூடாக சேர்த்த கருப்புப் பணத்தை பினாமிகள் பெயரில் பதுக்கி வைக்கும் வழிவகைகளை பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்!!

இப்படி ஏதுமே இல்லாமல், ஆட்களை ஏவி ஊர் ஊராகத் தேடிப் பிடித்து படிப்பறியா ஏழைக் குடும்பத்தின் முதல் தலைமுறை பிள்ளைகளின் தடைபட்ட - தடைபடும் கல்விக்கு கைகொடுத்து தூக்கி விடும் சூர்யா புதிய 'கல்விக் கொள்கை' பற்றி எப்படி பேசலாம்? அவருக்குஎன்ன தெரிந்துவிடப் போகிறது ?

வலியறிந்து ஓடி கைகாடுத்து பட்டதாரிகளையும், மருத்துவர்களையும், பொறியாளர்களையும் உருவாக்கி கொண்டிருக்கும் ஒரு நடிகன் நாடாள்பவர்களின் கல்விக் கொள்கையைப் பற்றி எப்படி விமர்சிக்கலாம்?

இப்படியான நடிகர் அப்படி பேசலாமா?
ஊர் பணத்தையும் சொத்தையும் அடித்து பிடுங்கி தன் சொத்தாக மாற்றிக் கொள்ளும் - கொண்டிருக்கும் அரசியல்வாதிக்கல்லவா அனைத்து தகுதியும் இருக்கிறது?

காலக் கொடுமை என்னவென்றால் மக்களுக்கு ஒரு நன்மையும் செய்யாத, சீட்டுப் பணம் நடத்தி மோசடி செய்த, இந்து சாமிகளை காப்பதாக அறக்கட்டளை அமைப்பு நடத்திக் கொண்டு,  அதில் தன் குடும்பத்து உறவுகளை மட்டுமே முக்கியஸ்தர்களாக சேர்த்துக் கொண்டு ஆட்டையைப் போடும் ராஜாவெல்லாம் சூர்யாவைப் பற்றி பேச வந்துட்டாரே என்பது தான்!!

சேற்றிலேயே உழன்று கொண்டிருக்கும் 'அதுகள்', ஆற்று நீரில் நீந்திக் கொண்டிருக்கும் மீனை பற்றி குத்தம் சொல்லுதாம் டா சாமி.

பா. ஏகலைவன்

No comments