பலகோடி மருந்துகள் நாசமானது:மன்னார் வைத்தியசாலை சாதனை?


மன்னார் பொது வைத்தியசாலையில் பயன்படுத்தப்படாத நிலையில் களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டிருந்த பெருமளவு மருந்துகள் தொடர்பில் சர்ச்சை வெடித்துள்ளது.இது தொடர்பில் கொழும்பு சுகாதார அமைச்சு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.

அண்மையில் மன்னார் பொது வைத்தியசாலையில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 33 மில்லியனிற்கும் அதிகமான பெறுமதியுடைய மருந்துக்கள் களஞ்சிய அறையில் காலாவதியான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சுகாதார அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் தலா ஒரு இலட்சத்து பத்தாயிரம் பெறுமதியுடைய 65 எண் நோயெதிர்ப்பு விசேட ஊசி மருநதுகள் அவ்வாறு காலாவதியாகிய நிலையில் கண்டறியப்பட்டதாக தெரியவருகின்றது.

சுமார் 72 இலட்சம் பெறுமதியுடையதென அம்மருந்துகள் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பல மருத்துவ உபகரணங்களும் பயன்படுத்தப்படாது களஞ்சியத்தில் நீண்ட காலமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர்களாக இருந்த சத்தியலிங்கம் மற்றும் குணசீலன் உள்ளிட்டவர்களால் கொள்வனவு செய்து குவிக்கப்பட்ட தரமற்றவை அவையென இன்னொரு புறம் விளக்கமளிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும். 

No comments