சிறைப் பிடித்த கப்பலில் 18இந்தியர்கள்! மீட்கும் நடவடிக்கையில் தூதரகம்;

நேற்று பாரசீக வளைகுடாவில் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த பிரித்தானியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறை பிடித்தது

சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்தவர்களில் 18 பேர் இந்தியர்கள் என தெரிவிந்துள்ள நிலையில் ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீட்கும் பணிகளை இந்திய அரசு முன்னெடுத்துள்ளதாக  வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று குறிப்பிட்டுள்ளார்.
 
ஈரான் தடுத்து வைத்துள்ள இந்த கப்பல் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தது என்றும் அனால் அது பிரிட்டனில் உள்ள எண்ணைய் நிறுவனத்துக்காக சரக்கு ஏற்றிச்செல்ல வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது என்பது கூடுதல் தகவல்.

No comments