மழை வெள்ளத்தில் 350க்கும் மேற்பட்டோர் பலி, பலகோடி பேர் பாதிப்பு!

தெற்கு ஆசியாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கடும் பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 350 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
 இந்தியாவில் 184, நேபாளத்தில் 90, பாகிஸ்தானில் 41 மற்றும் வங்கதேசத்தில் 37 ஆகிய மரணங்கள் பதிவாகியுள்ளன.

வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக குறைந்தது 62 பேர் இறந்துள்ளனர். அஸ்ஸாமில் அரசு அதிகாரியாக உள்ள சிவ குமார் கூறுகையில், பிரம்மபுத்திரா நதி பெருக்கெடுத்து ஓடியதால், வெள்ளத்தில் சிக்கி காசிரங்கா தேசியப் பூங்காவில் 10 அரிய வகை காண்டாமிருகம் இறந்துள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் மழையின் அளவு குறைந்துள்ள போதிலும் மாநிலம் முழுவதும் 3,700 கிராமங்களில் சுமார் 4,800,000 மக்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அசாம் பேரிடர்  ஆணையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12 அடையாளம் காணப்படாத மக்களின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments