மீண்டும் பதற்றம்! பிரித்தானியாவின் 2 கப்பல்களை கைப்பற்றியது ஈரான்!

ஈரான் வளைகுடா ஹொமுஸ் ஜலசந்தி பகுதியில் 2 பிரித்தானிய கப்பல்களை ஈரான்  கைப்பற்றியுள்ளது மத்தியகிழக்கு கடல்ப் பரப்பில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கப்பல்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரத்தை ஈரானின் புரட்சிகரக் காவலர்  என்ற இணையதளம் வெளியிட்டுள்ளதோடு இது "சர்வதேச கடல்சார் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கவே" கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் ,இதனை ஆய்வு செய்வதற்கு என 23 பேர் கொண்ட குழு ஒன்றும் ஈரானால் நியமிக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலர் ஜெரிமி ஹன்ட், இதை  "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஈரானின் செயல் கவலையளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

No comments