கன்னியாவும் காற்றுப்போன பஸ்சிம் - குணம்

அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்த போராட்டம். கன்னியாவை அடையா  1.15 ஆனது . போராட்டத்திற்கு செல்கிறோம் என நினைத்த நாம் போராடி போராடி செல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை.

முதல் முதலலாக காதால் கேட்டவற்றையும்,கட்டுரைகள்,கதைகள்,புத்தகங்கள் மூலம் அறிந்தவற்றை நேரே உணர்ந்தேன். ஏன் எதற்கு என்று தெரியாத காத்திருக்கவைப்பு, வேண்டும் என்றே புறக்கணிப்பு, செல்ல கூடாது என்று காற்றுத்திறப்பு.

எல்லா சோதனை சாவடிகளிலும் போராட்டம், வாக்குவாதம், அடிபாடாத குறை எல்லாத்தையும் மீறி இறுதி இடத்தில் உள்ளேயே விட முடியாது என்ற கட்டளை  எமக்கு மட்டும்.

    பொறுமை இழந்த அனைவரும் எங்களுக்குள் பேசுப்பட தொடங்கினோம்.
எங்களில் இருவருக்கும் சிங்கள படைக்கும் இடையில் மினி போரே ஏற்பட்டது . உள்ளே விடாமைக்காண காரணம் இல்லை மறி மறி கேட்டும் பதில் இல்லை விரக்தி அனைவருக்கும் கோவமானது அதில் சிலருக்கு அதிகமாகவே. வாக்குவாதம் முற்றி காரணம் கேட்டு சிங்கள சிப்பாய்க்கும் எங்களில் இருவருக்கும் இடையேயான துரம் ஒரு சானும் இல்லை . வேகமாக பாதுகாப்பு அரணுகளுக்குள் இருந்த துப்பாக்கிகள் எம்மை சூழ்கிறது. அவ் இடத்தை விட்டு விடைபெற்றோம்.

தகவல் வருகிறது மாற்று வழி உள்ளதாகவும்,அதனால் வரலாம் என்றும் 150 M துரத்தை 9 KM தூரம் சுற்றி வந்தடைந்தோம் ஒருவழியாக இலங்கை அடைந்து விட்டோம் என்ற மகிழ்ச்சி,ஓர்மம்
ஆனால் காத்திருந்தவையோ வேறு...

இன போராட்டம்..

 அரசியல்,சமய போட்டம் ஆகி இருந்தது. எம்மவர்களுக்குள் பிரிவு பிரிவாக சண்டை அந்த கணம் இதை காணவா இவ்வளவு போராட்டம். அன்று எதுவுமே எழுத முடியவல்லை . ஏன் வந்தோம் எதற்கு வந்தோம் என்று தோன்றியது ...

அந்த இடத்தை விட்டு விலகும் போது கூக்குரல்கள் கேட்டது திரும்பி பார்கவே வெட்கமாக இருந்தது பார்கவில்லை ஆனால் பாதுகாப்பு படைக்கு பின்னால் நின்று கத்தினார்கள் என்று மட்டும் தெரிந்தது...

இன போராட்டத்தில் அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் உள்ளவை வெற்றி பெற முடியாது.

என்று நாம் எல்லோரும் ஒரு குரலாய் ஒன்று படுகிறோமோ அன்று சிங்கத்திற்கு கதி கலங்கும்.

ஆனால் ஒற்றுபடாமல் இருக்க எங்கள் அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள்.

- Kunam pusha -

No comments