கூட்டமைப்பினர் ராஜினாமா செய்யட்டும்:ஆறுதிருமுருகன்!


தமிழர் தேசத்தில் அவமதிப்புகள் மற்றும் ஆக்கிரமிப்புக்கள் தீர்வு இன்றி தொடர்ந்தால் பதவி விலகக் கூட தயங்கக் கூடாது என சிவபூமி முதல்வர் ஆறு. திருமுருகன் அனைத்து தமிழ் அரசியலாளர்களிற்கும் அறை கூவல் விடுத்துள்ளார்.

தென்கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்டமைக்கான கண்டன போராட்டம் இன்று மாலை நல்லூர் கயிலாயப்பிள்ளையார் ஆலய முன்றலில் ஜநா அலுவலகத்தின் அருகில் நடைபெற்றிருந்தது.

அங்கு கலந்து கொண்டு தனது கருத்தை பதிவு செய்த ஆறு.திருமுருகன் தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்டமைக்கு தமிழ் எம்.பிமார் தமது கடுமையான கண்டனம் வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கன்னியா போராட்டத்தின் போது தென் கயிலை ஆதீன முதல்வர் அகத்தியர் அடிகளார் தேநீர் ஊற்றித் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். கைலாச பிள்ளையார் முன்றலில் இன்று அகில இலங்கை சைவ மகா சபை உள்ளிட்ட சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் கண்டனப் போராட்டம் நடைபெற்றிருந்தது.

இதன் போது மததலைவர்கள் மற்றும் சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன், சமய , சமூக தலைவர்கள் பெருமளவில் இன்று மாலை கலந்து கொண்டனர்.

No comments