74 வீதம் பேர் ஆதரவு! பிரதமர் ஆகிறார் போரிஸ் ஜான்சன்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக செய்து முடிக்க இயலாமையினால்  பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் புதிய பிரதமருக்கான போட்டியில் அக்கட்சியின் முன்னாள் வெளியுறவு அமைச்சர்  போரிஸ் ஜான்சனுக்கும் மற்றும் தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெராமி ஹண்டுக்கும் போட்டியில் களமிறங்கியுள்ளனர்.

 இதில், போரிஸ் ஜான்சனுக்கு 74 வீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது என்றும் 26 வீதம்பேர் மட்டுமே ஜெராமி ஹண்டுக்கு ஆதரவாக உள்ளனர்  என்றும் ‘டைம்ஸ்’ நாளிதழ் சார்பில் கன்சர்வேடிவ் கட்சியினர் மத்தியில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளனர். எனவே  போரிஸ் ஜான்சன் அமோக வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்புஏற்பட்டுள்ளத்க பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றது.

No comments