பொதுஜன பெரமுன இனி தனி ஓட்டம்?


சுதந்திரக்கட்சி சார்பில் மைத்திரி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உட்பட ஏனைய சகல தேர்தல்களிலும் கூட்டணியின் கீழ் போட்டியிட சிறீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் கூட்டு எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் என்பன இணைந்து தீர்மானம் எடுத்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் புதிய கூட்டணியொன்றை பதிவு செய்வது தொடர்பிலும் விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னணி அரசியல் கட்சிகள், பல்சமூக அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், சமய அமைப்புக்கள் ஆகியன இணைந்து இப்புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளது.

இந்த புதிய கூட்டணியின் கீழ் தேர்தலை வெற்றி கொள்ள நாடு முழுவதும் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க சிறீலங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

முன்னதாக சுதந்திரக்கட்சி மற்றும் சிறீலங்கா பொதுஜன பெரமுன பேச்சுக்கள் வெற்றி பெறாத நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

No comments