பிரான்ஸ் வரலாற்றில் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளது!

பிரான்சின் அதிகூடிய வெப்பநிலையாக 45.9 செல்சியஸ் (114.6 பரனைற்) இன்று பதிவாகியுள்ளது.

இது பிரான்சின் புதிய சாதனை.  இதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு  44.1 செல்சியஸ் பதிவாகியிருந்து. இப்வெப்பத்தால் பலர் உயிரிழந்திருந்தனர்.

வெப்பம் குறித்து சுகாதார அமைச்சர் அக்னிஸ் புசைன் இப்வெப்பத்தால் ஒவ்வொருவருக்கும் ஆபத்து உள்ளது எனக் கூறியுள்ளார்.

பிரான்சின் வானிலைச் நிலையம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இவ்வெச்சரிக்கை அனைத்துமே தெற்குப் பகுதிக்கு கூறப்பட்டுள்ளது. உள்ளன,

ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து மற்றும் செக் குடியரசின் மிக உயர்ந்த வெப்பநிலை இம்மாதம் பதிவாகியுள்ளது.

No comments