அமெரிக்கர்களிற்கு சிங்களவர்கள் மீது கோபமாம்?


இலங்கையிலுள்ள சிறுபான்மையினருக்கு அடிப்படைவாத சிங்களவர்களின் மூலமே பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வொசிங்டன் நகரில் நடைபெற்ற அமெரிக்க காங்கிரஸ் சபை கலந்துரையாடல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் டேனி கே டேவிட் இந்த கலந்துரையாடலில் இதனைக் கூறியுள்ளதாக இன்றைய  சிங்கள நாளிதழொன்று அறிவித்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பு கொடூரமான முறையில் கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் காங்கிரஸ் சபையில் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலின் போது கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை நடாத்திய பயங்கரவாதிகள் பற்றி ஒரு வசனம் கூட கூறப்படவில்லையெனவும் அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தெற்கிலுள்ள சிங்களவர்கள் வடக்கு, கிழக்கிலுள்ள பாரம்பரிய தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை பலவந்தமாக பிடித்துக் கொண்டுள்ளதாகவும் டேனி டேவிட் அச்சபையில் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

No comments