மூக்குடைந்த தமிழரசு இதழ் அறிமுக நிகழ்வு!


தமிழரசுக்கட்சியின் தொண்டரடிப்பொடிகள் எவ்வாறேனும் தமது கட்சி விசுவாசத்தை வெளிப்படுத்தி அடுத்த தேர்தலில் கதிரையினை கைப்பற்றிவிடுவதில் மும்முரமாகவேயுள்ளன்ர்.

அவ்வகையில் கிளிநொச்சியில் நடந்த தமிழரசு கட்சி பத்திரிகையான “புதிய தமிழ் நாதம் “ வெளியீட்டு விழா ஆரம்பமன்றே பிசுபிசுத்துப்போன பரிதாபம் நடந்துள்ளது.

ஆயிரக்கணக்கில் விருந்தினர்களது வருகைக்கு மண்டபம் தயாராக இருந்த போதும் வெறும் 14 கதிரைகளை மட்டும் வந்திருந்தவர்களால் நிரம்பியிருந்தது.


சுமந்திரனின் ஆதரவாளரா அல்லது சிறீதரனின் ஆதரவாளரா என கண்டறிய முடியாத அல்லக்கைகளில் ஒருவர் தலைமையில் நடந்த நிகழ்வில் நடுநிலைமையினை காண்பிக்க டக்ளஸ் முதல் சந்திரகுமார் வரை அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அவர்கள் எவருமே எட்டிப்பார்த்திருக்காத நிலையில் வந்து சேர்ந்த சிவசக்தி ஆனந்தனோ சமஸ்டி கேட்ட தமிழரசு தற்போது சமூர்த்தி கேட்பதாக போட்டுடைத்திருந்தார்.

முன்னால் அமர்ந்திருந்த மாவை மற்றும் சிறீதரன் உள்ளிட்டவர்களின் முகத்திறைந்துவிட்டு சிவசக்தி ஆனந்தன் சென்றுவிட்டார்.

யார் அழைத்தாலும் மாலைக்கும் மேடைக்கும் அலையும் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலை லலீசன் போன்ற ஒரு சிலர் மட்டுமே எட்டிப்பார்க்க நிகழ்வு ஒப்பேற்றப்பட்டிருந்தது. 

ஏற்கனவே மாகாணசபை தேர்தலில் இடம் கேட்டு நபரொருவர் தமிழரசு இணையம் நடத்த தற்போது வார இதழ் என மற்றொருவர் புறப்பட்டுள்ளார்.
இதனிடையே அழைப்பிதழில் வருவதாக அறிவிக்கப்பட்டவர்கள் வந்தாலேயே மண்டபம் நிரம்பியிருக்குமென உள்ளுர் ஊடகவியலாளர் தெரிவித்தார்.

No comments