மைத்திரிக்கு பணிந்தது தெரிவுக்குழு?


இலங்கை ஜனாதிபதி மைத்திரியின் மிரட்டலிற்கு ரணில் தரப்பு பணிந்துவரத்தொடங்கியுள்ளது.

அவ்வகையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து நாடாளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழுவின் விசாரணையின் போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான தகவல்கள் முன்வைக்கப்படும் போது, ஊடகங்களை அனுமதிக்காமல் இருப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குவின் பதில் தலைவர் ஜயம்பதி விக்கிரமரத்ன தலைமையிலான தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள், சபாநாயகர் கருஜயசூரியவை, இன்று (12) சந்தித்துப் பேசி,  மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

No comments