யேர்மனி சான்ஸ்சிலர் அலுவலகத்தின் முன் சங்கிலிப் போராட்டம்!

ஜேர்மனியில் பருவநிலை அவசரநிலையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.


ஜேர்மனியின் சான்ஸ்சிலர் ஏஞ்செலா மெர்கெலின் அலுவலகத்தை இலக்கு வைத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எக்ஸ்டிங்சன் ரெபெல்லியன் அமைப்பைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். 

2025ம் ஆண்டிற்குள் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து  13 அரசுத் துறைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்

50க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். “நமக்கு என்ன வேண்டும்? பருவநிலைக்கான நீதி! எப்போது வேண்டும்? இப்போதே வேண்டும்”, என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பினர்.No comments