தாஜ்மகாலைத் துரத்தும் குப்பை மேடு!

இந்தியாவின் மிக உயரமான குப்பை கொட்டும் மேடு புதுடில்லியில் அமைந்துள்ளது. காஸிபூர் எனும் இடத்தில் குப்பை கொட்டுவதால் நாளுக்கு நாள் குப்பைக் குவியல் அதிகரித்துக்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து குப்பை கொட்டுவதால் அப்பகுதி ஆண்டுதோறும் 10 மீட்டர் உயர்வதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது அதன் உயரம் 65 மீட்டருக்கும் மேல்.
இதே போக்கில்  தொடருமானால், 2020ஆம் ஆண்டிற்குள்
தாஜ் மஹாலின் உயரத்தை அது மிஞ்சும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

No comments