அணுக்கழிவுகளின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு! கொந்தளிக்கும் தமிழகம்...

அணுக்கழிவுகளை முழுமையாகச் செயலிழக்க வைக்க தொழில்நுட்பங்கள் இல்லாத நிலையில், அதை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வகையில் அணுக்கழிவு மையம் அமைக்க இந்தியாவில் கூடங்குளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் ஜூலை 10ந்தேதி பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் அணுஉலைகள் மூடப்பபட்டு வரும் நிலையில், இந்தியாவில் தற்போது வரை 22 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. கூடங்குளத்தில் 2 அணுஉலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 2அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதும் மேலும் 20 அணு உலைகள் புதியதாக வரப்போவ தாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் முதன்முறையாக அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் மையம் அமைக்க கூடங்குளம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இது தொடர்பான வழக்கில், கூடங்குளத்தில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள் என்ற நீதிமன்றத்தில் கேள்விக்கு, தேசிய அணுமின் கழகம், நாட்டில், அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் இல்லை என்றும், `கூடங்குளத்தில் உற்பத்தி யாகும் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் வைக்கப் போகிறோம்' என தெரிவித்தது. அத்தீர்ப்பு வெளியான சில மணிநேரங்களில் கர்நாடகா, தங்கள் மாநிலத்தில் அணுக்கழிவுகளை கொட்ட விடமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக ஜூலை 10ந்தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த இருப்பதாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது.

இந்த கருத்துக்கேட்பு கூட்டம் ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசு பள்ளியில் இந்த கூட்டம் நடை பெறும் என்றும், பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் அணுஉலை, மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களை கொண்டு வந்து, தமிழகத்தை சுடாகாடாக மாற்றி வரும் மத்தியஅரசு, தற்போது அணுக்கழிவு களை பாதுகாக்கும் மையம் அமைக்க கூடங்குளத்தையே தேர்வு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அணுக்கழிவுகளை முழுமையாகச் செயலிழக்க வைக்க புதிய தொழில்நுட்பங்கள் இல்லாமல் உலக நாடுகளே திணறி வரும் நிலையில், இந்தியா கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்க முன்வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தை நிர்முலமாக்க மத்திய மோடி அரசு முடிவு செய்துள்ளதுபோலும்…

No comments