வேடிக்கை பார்க்கும் விசுவாசி ரஜினி; வெளுத்துக்கட்டும் ரஹ்மான்!

இந்தியாவில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், தமிழகத்திலிருந்து இதற்க்கு எதிராக வலுவான எதிர்பு கிளம்பியுள்ளது அதேவேளை எதிராக (குறிச்சொல்) ஹேஸ்டேகும் முன்னிலையானதோடு பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இதற்கு எதிராக குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

அதில் முக்கியமாக அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பியுள்ளார் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளரும் ஓஸ்கார் நாயகனுமான தமிழர் எ.ஆர்.ரஹ்மான் என்றுமில்லாதவாறு தனது கீச்சு பக்கத்தில் பெரும் வாதம் ஏற்படுமளவுக்கு பதிவுகளை பதிந்து வருகிறார்.

முதலில் ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய கீச்சு பக்கத்தில் பஞ்சாபி ஒருவர் மரியான் படத்தில் வரும் தமிழ் பாடல் ஒன்றை பாடியுள்ளதை எடுத்து பகிர்ந்து. அதனுடன் பஞ்சாபில் தமிழ் பரவுகிறது என்று பதிவொன்றை இட்டிருந்தார், அதுவே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பாஜகவினரை சீண்டியதுபோல் இருந்தது.


பின்னர் எதிர்ப்புகள் வந்ததால், ஹிந்தி கட்டாயமல்ல என்று வரைவு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் இந்த மாற்றத்தை வரவேற்று 
“தமிழகத்தில் இந்தி கட்டாயம் இல்லை என மும்மொழிக் கொள்கை வரைவில் திருத்தப்பட்டது அழகிய தீர்வு” என ரஹ்மான் மீண்டும் பதிவிட்டிருந்தார்.

தற்போது மீண்டும் ரஹ்மான் பதிவு ஒன்றை செய்துள்ளார். அது என்ன என்றால் ‘அட்டானமஸ்’ என்னும் ஆங்கில வார்த்தைக்கு கேம்பிரிஜ் அகராதியில் என்ன பொருள் என்பதை பகிர்ந்துள்ளார். அட்டானமஸுக்கு தமிழில் தன்னாட்சி என்பது பொருள். எனவே இது ரஹ்மான் மத்திய அரசை கண்டிக்கும் விதமாகதான் இந்த பதிவை செய்துள்ளார் என்று ரகுமான் பிரியர்களும் சமூக ஆர்வலர்கள்களும் தமிழ்உணர்வாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.


தற்போது வரை இறுதியாக தனது கணக்கு விவரப் பகுதியில் “Tweets done by admin” என்று மாற்றியிருக்கிறார், சிலர் அது பயத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று கூறினாலும் ஏ.ஆர். ரகுமானை பொறுத்தவரையில் தான் ஒரு தமிழன் என்பதையும் தன்னுடைய மொழி அடையாளத்தையும் எங்கும் விட்டுக்கொடுத்ததில்லை அதனால் தான் அவர் ஓஸ்கார் விருது வாங்கியபோதும் அந்த மேடையிலேயே “எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறியவர், பிறகு ஏனென்று ஆராய்ந்தால்  அது பாஐகவின் ஹச் ராஜவை நேரடியாக கிண்டலடிப்பதாகவே அறிய முடிகிறது, ஏனென்றால் பல சிக்கலான சர்ச்சை கருத்துக்களை பதிவு செய்துவிட்டு பின்னர் அதை நான் போடவில்லை எனது பக்க நிரவாகியே என்று கூறியவர் அதனை சூசகமாக நக்கல் அடிப்பதாகவே புரியமுடிகிறது.

இது இவ்வாறு இருக்க கொஞ்சம் கொஞ்சமாக தான் பாஜக விசுவாசி என்று நிரூபிக்கிறார் நடிகர் ரஜனிகாந்த், மோடிக்கு சார்பான சூழல் நிலவும் நேரத்திலும், நல்ல திட்டங்கள் வரும் சமயத்தில் மட்டும் கருத்து சொல்லுவதும் கீச்சுக்கள் இடும் அவர், வழமை போல தமிழர்களுக்கு எதிரான திட்ட நடவடிக்கை சமயத்தில் ஒதுங்கி இருக்கிறார். 

அரசியலில் களமிறங்கத்துடிக்கும் மராட்டியரான ரஜனி தமிழ் நாட்டிலிருந்துகொண்டு தமிழர்களுக்கு எதிரான சூழல் உருவாகும் போது ஒளிந்துகொள்வது அவரின் கோழைத்தனத்தையும் மோடியின் அடிமை விசுவாசத்தையுமே உணர்த்துகிறது. 
ஆனால் அரசியல் ரீதியாக எந்த லாபநோக்கங்களையும் எதிர்பாக்காது தனது எண்ணத்தை நேர்மையாக பிரதிபலிக்க ஏ.ஆர். ரகுமான் பின் நிற்பதில்லை என்றே கூறமுடியும். இசை மூலம் செவிவழியாக அசைய வைத்த ஏ.ஆர். ரகுமான் இனி தன் நேர்மை கருத்துக்களால் தமிழுக்கும், தமிழருக்கானதுமான கரந்தை வலுப்படுத்துவார் என நம்புவோம்.

- திலீபன்-

No comments