சோதனைகளை குறைக்கிறாராம் தர்சன?


வடக்கில் முஸ்லீம் பயங்கரவாதத்தை தடுக்கவே தொடர்ந்து பாதுகாப்பு கெடுபிடிகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கைப்படைகளது யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தர்சன ஹெட்டியாராச்சி விளக்கமளித்துள்ளார்.தன்னுடன்  தொலைபேசியில் பேசிய இலங்கை அமைச்சர் மனோகணேசனிடமே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

யாழிலிருந்து, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, செல்லும்போதும், வரும்போது தெற்கில் இல்லாத அளவுக்கு, பெரும் எண்ணிக்கையில் அடிக்கடி, ஏற்றி இறக்கும் சோதனை கெடுபிடிகள் இருப்பதாக வடக்கில் இருந்து வந்த புகார்களை பற்றி அவரிடம் சுட்டிக்காட்டியதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கெடுபிடிக்கு உள்ளாக்குவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றதென தெரிவித்த போதே முஸ்லீம் பயங்கரவாதம் மூலம் வடக்குக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதே எம் கரிசனை. இப்போ நிலைமை சுமூகமாகி வருகிறது. சோதனை சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கிறேன் எனஇலங்கைப்படைகளது யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தன்னிடம் தெரிவித்தாகவும் மனோகணேசன் அறிவித்துள்ளார்.

வடக்கில் ஏ-9 வீதி மற்றும் மன்னார் வீதிகளில் யுத்த காலங்களை போன்று மீண்டும் இராணுவத்தினரால் பாதுகாப்பு கெடுபிடிகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments