கப்பம் கொடுக்க மறுத்த முஸ்லிம் வர்த்தகர் குத்திக் கொலை
காலி வீதி தெஹிவளையில் ஹார்ட்வெயார் நடத்தும் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கேட்டு அவர் கொடுக்க மறுத்தபின் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் இன்று பிற்பகல் நடந்துள்ளது.
பிற்பகல் மூன்று மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.கத்தியால் குத்தப்பட்ட வர்த்தகர் ( அஸீஸ் 60 வயது )களுபோவிலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
தனியே அவர் கடையில் இருக்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
தெஹிவளை பொலிஸார் அந்தப்பகுதி சி சி ரி வி கேமராக்களை ஆய்வுக்குட்படுத்தி விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதி முஸ்லிம் வர்த்தகர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Post a Comment