லக்ஸ்மன் கதிர்காமர் கொலைச் சந்தேக நபர் சிறையில் மரணம்

முன்னாள் அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக சந்தேகத்தில் கைதாகி 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்(மு.சகாதேவன் -61) உயிரிழந்தார்.

அரசியல் கைதிகள் நலன் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் அடிகளார் இந்த தகவலை வழங்கியுள்ளார்.

உயிரிழந்தவரது சடலத்தை பொறுப்பேற்க அவரது உறவினர்களுக்கு அழைப்பு கிடைத்துள்ளது.

சுகவீனத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments