நடுவானில் மோதிக்கொண்டது போர் வானூர்திகள்! கடலுக்குள் விழுந்தனர் வானோடிகள்;

ஜெர்மன் விமானப்படைக்கு சொந்தமான மூன்று யூரோ போர்  வானூர்திகள்  பிளீசென்சி பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் நடுவானில் ஒன்றோடு ஒன்று உரசி  மோதிக்கொண்டன. மோதிய விமானங்கள் கட்டுப்பாட்டினை இழந்து அருகில் உள்ள மியூரிட்ஸ் ஏரி அருகில் விழுந்து நொறுங்கின. 

எனினும் விமானங்களில் இருந்த இரண்டு வானோடிகளும் பாதுகாப்பு கருவியான 'பாராசூட்’ உதவியுடன் வெளியே குதித்து தப்பித்துகொண்டனர்.

 விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர், ஒரு விமானியை உயிருடன் மீட்டனர். ஏரிக்குள் விழுந்த மற்றொரு விமானியை தேடி வருகின்றனர்.

No comments