சென்னை வீதிகளில் திடீர் பள்ளங்கள்! போக்குவரத்து பாதிப்பு;

சென்னையின் முக்கிய வீதிகளில் திடீர் திடீரென பள்ளம் ஏற்படுவதால், கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இன்று அதிகாலை சென்னை அடையாறு- கிண்டி பட்டேல் சாலை- ராஜீவ் காந்தி ஐடி காரிடார் சந்திப்பின் மையமான மத்திய கைலாஷ் பகுதியில்  சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டது எனினும்  போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.

ஆறு அடி ஆழம் கொண்ட இந்தப் பள்ளம் சாக்கடை அமைப்பதில் ஏற்பட்ட நேர்தியின்மை  காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இந்த பள்ளத்தில் கழிவு நீர் கசிவதும் தெரிகிறது” என்பதால்.

No comments