விசாரணையில் தலைகுனிந்த ஹிஸ்புல்லா?

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்லிம் மக்கள் விரும்பவில்லையென தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா பொறுப்புள்ள அரசியல்வாதி அப்படி சொல்லாமுடியுமாவென்ற கேள்விக்கு தலைகுனிந்து மௌனம் சாதித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று மாலை மீண்டும் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி  கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா சாட்சியம் வழங்கினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,”உலக நாடுகளில் பெரும்பான்மை இனமாக முஸ்லிம்கள் இருப்பதையே நான் கூறினேன். தாக்குதல் குறித்த அச்சத்திலிருந்த முஸ்லிம்களை உற்சாகப்படுத்துவதற்காகவே அந்த கருத்தை கூறியிருந்தேன்.
2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சஹ்ரான் என்னை தோற்கடித்தார். அனைத்து அரசியல் தலைவர்களை போல நான் சஹரானை சந்தித்திருக்கிறேன். 2015 காலப்பகுதியில் சஹ்ரானுக்கும் இராணுவத்தினருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் தொடர்பு இருந்தது.
2017 வரை மதத் தலைவராக இருந்த ஷஹரான் காசீம் இதன் பின்னர் அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அல்லது சில குழுவுடன் தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது. மத போதனைகளில் ஈடுபட்டு பல இளைஞர்களை கவர்ந்திருந்த ஷஹரான் பின்னர் பலரையும் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்தும் இஸ்லாம் குறித்து மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்த சஹரான், பொதுமக்களிடத்தில் தீவிரவாதத்தை பிரசங்கிக்க ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கு பொலிஸாரே அனுமதி கொடுத்திருந்தார்கள்.
2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் காத்தான்குடியில் சஹரானோ அல்லது அவர்களது நண்பர்களோ இருக்கவில்லை. அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்களா என்பதும் எனக்கு தெரியாது.
வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை. முஸ்லிம் மக்கள்தான் ஆயுதம் ஏந்துவார்கள் என்று கூறினேன்.
மேலும் காத்தான்குடியில் அரபு மொழிகளில் பெயர்ப்பலகைகள் இருப்பது அரபு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துகொள்ளவே. ஆனால் அரபு மொழி பெயர்ப்பலகைகள் இடக் கூடாது என்று சட்டம் இல்லை” என்றும் கூறினார்.

No comments