காந்தி போனோர் முன்னே: இப்பொழுது சங்கிலியன்?


காந்தி மற்றும் பாரதியார் சிலைகளை கொண்டு தனது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்த யாழிலுள்ள இந்திய தூதரகம் தற்போது சங்கிலியன் சகிதம் கடை விரிக்க தொடங்கியுள்ளர்து.

மாவீரர்களது தியாகம் தாங்கிய தமிழீழ மண்ணில் அதனை மறந்தடிக்க இந்திய உளவு கட்டமைப்பு பாடுபட்டுவருவது தெரிந்ததே.

அதன் அடிப்படையில் முழத்துக்கொரு காந்தி சிலையினை நிறுவ மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிசுபிசுத்ததையடுத்து தமிழ் அரசர்களினை முன்னிறுத்தி அரசியலை இந்திய துணைதூதரகம் ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில் இந்திய நிதியில் முல்லைதீவில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஊடாக நிறுவப்பட்ட பண்டாரவன்னியன் சிலை போலியோ நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடையதென விமர்ச்சிக்கப்பட தற்போது மறவன்புலோ சச்சிதானந்தன் மூலம் சங்கிலியனின் தூபி  தூக்கப்பட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் யாழ்.திருநெல்வேலி சந்தியில் 30 இலட்சம் ரூபாயில் சங்கிலிய மன்னனுக்கு சிலை அமைக்கவுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த.தியாகமூர்த்தி என்பவர் தற்போது தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிக்விக்கையில் திருநெல்வேலி சந்தியில் நுழைவாயிலும், அதனுடன் சங்கிலிய மன்னனின் சிலையும் அமைப்பதுக்கு பிரதேச சபையினால் 3 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகளை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என மேலும் தெரிவிதுள்ளார்;.
நெரிசல் மிக்க திருநெல்வேலி சந்தியில் சங்கிலியன் சிலையாவென மக்கள் வாய் பிளந்து அதிசயித்த வண்ணமுள்ளனர்.

No comments