மாநில சுயாட்சி மலரும்; வைகோ சூளுரை!

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் அதேவேளை தமிழகத்தில் மாநில சுயாட்சி மலரும் என்று  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு உரையாற்றுகையில்
தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமான நரேந்திர மோடி ஆட்சி தூக்கி எறியப்படும். தமிழகத்தை வஞ்சிக்கும் திட்டங்களையெல்லாம் அனுமதிக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் தூக்கி எறியப்படும். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளை விற்றுள்ளார்கள். அண்ணா கனவு கண்டது சுயாட்சி, கலைஞர் கொள்கை அளவில் கொண்டது சுயாட்சி. ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்வது மாநில சுயாட்சி. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.

No comments