நாங்கள் 80 இலட்சம் பேர் இருக்க: வடஇந்தியர்களுக்கு இங்கு என்ன வேலை: வைகோ!

மத்திய அரசுப் பணியிடங்களில் தமிழகத்தில் வட இந்தியர்களை மட்டுமே நிரப்புவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை வானூர்தி நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..
“தபால் துறை, தொடரூந்து துறை உள்ளிட்ட மத்திய அரசின் எந்த பொதுத் துறையாக இருந்தாலும் வட மாநிலத்தவர்களையே முழுக்க முழுக்க தேர்வு செய்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். திருச்சி தொடரூந்து பணிமனையில் பயிற்சியாளர்கள் பணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த யாரும் தேர்வு செய்யப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

தமிழகத்திலேயே 80 லட்சம் பேருக்கு வேலையில்லாமல் இருக்கும்போது வட இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளை வாரி இறைப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், “தமிழகம் என்ன வேட்டைக்காடா? காலனியாக்கப்பட்டு விட்டதா? தமிழில் தேர்வு எழுதும் பிற மாநிலத்தவர்களுக்கு மதிப்பெண்களை அள்ளிப்போட்டு அவர்களை வேலைக்கு தேர்வு செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு 2 சொற்களை கூட தமிழில் சொல்லத் தெரியவில்லை என்று உடன் வேலை செய்கின்ற பணியாளர்கள் என்னிடம் தெரிவித்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இதுபுதுமையான ஆக்கிரமிப்பாக உள்ளது” என்றார்.

No comments