அல் – முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் ஆபத்தானது


அல் – முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் சிந்தனைக் கோட்பாடுகளானவை, இலங்கையில் வாழும் பாரம்பரிய முஸ்லிம்களின் கோட்பாடுகளுக்கு முரணானவை.’’ – என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை கிளை தெரிவித்துள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு அரபு மொழி கற்பிக்கப்படுவதாகவும், இஸ்லாமிய சிந்தனைகள் திணிக்கப்பட்டு மதமாற்றம் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமானும் இது தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் மேற்படி பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை கிளையிடம் செந்தில் தொண்டமான் எம்.பி. வினவியிருந்தார்.  இதற்கு ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை கிளை செயலாளரின் கையொப்பத்துடன், மாகாண அமைச்சருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமக்கும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இந்த விவகாரம் மிகவும் ஆபத்தான செயல் என்பதால் இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

No comments