இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை! பாதுகாப்பு அவையில் பிரான்ஸ்!

ஐநா பாதுகாப்பு அவையில்  இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது

ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, ஐநாவுக்கான பிரான்ஸின் நிரந்தர பிரதிநிதி பிரான்கோயிஸ் டெலட்ரே ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி ஆகிய நாடுகள் இருப்பது காலத்தின் கட்டாயம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. பாதுகாப்புக் அவையில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் உள்ளன. மற்றைய 10 நாடுகளின் உறுப்புரிமை 2 ஆண்டுகளுக்கானது என்பது கூடுதல் தகவல்.

No comments