பிறந்தது இரட்டைத் தலைகளுடன் நிறமற்ற ஆமைக் குஞ்சு!

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் வசிக்கும் நூன் அவ்ஸானி என்கிற பெண் தனது வீட்டில் ஆமை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.

இந்த ஆமை அண்மையில் முட்டைகளை இட்டு, குஞ்சு பொறித்தது. அதில் ஒன்று ‘அல்பினோ’ எனப்படும் நிறம் அற்றதாகவும், இரு தலைகள் கொண்டதாகவும் அபூர்வப் பிறவியாகப் பிறந்தது.

இந்த அரியவகை ஆமை குறித்து, சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியதையடுத்து ஆர்வலர்கள் பலரும் நூன் அவ்ஸானி வீட்டுக்கு சென்று அந்த ஆமையை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

இதற்கிடையே நூன் அஸ்வானி இந்த ஆமையை 24,000 ஸ்ரேலிங் பவுண்களுக்கு (31,500 அமொிக்க டொலர்கள்) விற்க முடிவு செய்துள்ளார். எனினும் இந்த ஆமை நிறம் அற்றதாக பிறந்திருப்பதால் நீண்டகாலம் வாழாது என நினைத்து, அதனை வாங்க அனைவரும் தயக்கம் காட்டுவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

No comments