ஜனாதிபதி மெய்பாதுகாவலர் கைத்துப்பாக்கி மாயம்! ஜெர்மன் உயர்பீடத்தில் பரபரப்பு!

ஜேர்மனிய ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொறுப்பான மெய்க்கபாதுகாவலர் கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளது ஜெர்மன் உயர்பீடத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பெடரல் குற்றவியல் காவல் அலுவலகத்தின் (BKA) புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பெர்லினில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளையிலேயே  காணாமல் போனதாக பாதுகாவலர் முறைப்பாடு செய்துள்ளார்,எனவே விடுதியில் யாரவது திருடியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.

"Glock 17" எனும் வகையைச்சேர்ந்த கைத்துப்பாக்கி மற்றும் அதன் ரவைகளுடன் காணாமல் போனதாக மேலும் தெரியவருகிறது.

No comments