வடகொரியாவின் 2வது ஏவுகணைப் பரிசோதனை! பதிலடியாக கப்பலைக் கையகப்படுத்திய அமெரிக்கா!


வடகொரியா குறுந்தூர ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளது. இன்று வடகொரியாவின் வடக்கு பியாங்கன் பகுதியில் குறுந்தூர ஏவுகணைகள் இரண்டைப் பரிசோதனை செய்துள்ளது.

இந்த ஏவுகணைகள் 270 மற்றும் 420 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்குகளைச் சென்ற தாக்கிய அழிக்கக்கூடியது எனக் கூறப்பட்டுள்ளது. 

வடகொரியா கடந்த ஒரு வாரத்திற்குள் இரண்டாவது ஏவுகணைச் சோதனைகளை நடத்தியுள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது.

இப்பரிசோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியாவின் சரக்குக் கப்பல் ஒன்று  அமெரிக்காவால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துலக தடைகளை மீறியதாகக் குற்றம் சாட்டியே இக்கப்பலை  அமெரிக்கா கையகப்படுத்தியுள்ளது.



இக்கப்பல் 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் பதியப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

No comments