இராஜிவ் கொலையும் சுப்ரமணியசாமி என்ற இஸ்ரேல் கைக்கூலியும்!


இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதை போல இந்தியாவும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று சாத்தான் சுப்ரமணியசாமி ஒரு வாரத்திற்கு முன்பு வேதம் ஒதியிருக்கிறான்.
சுப்ரமணியசாமிக்கு என்ன இஸ்ரேல் மீது இவ்வளவு அக்கறை என்பதை தெரிந்துகொள்ள நாம் 1980 மற்றும் 1990 காலகட்ட வரலாற்றை சற்று தெரிந்துகொண்டால் புரிந்து கொள்ளலாம்.
ஆசியாவில் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்த யாரெல்லாம் தடையாக இருப்பார்களோ அவர்களையெல்லாம் நீக்கம் செய்யும் வேலையை இஸ்ரேல் வழியாக அமெரிக்காவும் மேற்குலகமும் செய்தது.
உதாரணமாக ஆப்கானிஸ்தான் வழியாக மேற்காசிய நாடுகளை கைகொள்ள அமெரிக்கா ஐநா வழியாக போட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட அப்போது 1988இல் பாகிஸ்தான் அதிபராக இருந்த முகமது ஜியா உல் ஹக் எதிர்த்தார் என்பதற்காக
அவரது ஆதரவில் பாகிஸ்தான் பிரதமராக இருந்த முகமது கான் ஜோன்ஜோ என்பவரை அதிபருக்கு எதிராக மாற்றி அதிபருக்கே தெரியாமல் அந்த ஒப்பந்ததில் கையெழுத்திடவைத்தனர்.
இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் அதிபர் மே 29’1988 அன்று பிரதமரின் பதவியை பறித்ததோடு தேர்தலையும் அறிவித்தார். இது நடந்த இரண்டு மாதத்தில் 17ஆகஸ்ட் 1988 அன்று கொல்லப்பட்டார். இதன் பிறகு இன்று வரை அமெரிக்காவின் கட்டுபாட்டில் தான் பாகிஸ்தான் இருக்கிறது.
இதே நிலைமைதான் இலங்கையிலும் நடந்தது. அங்கே 1985க்கு பின் தீவிரவமடைந்த சிங்கள தமிழர் பிரச்சனையில் தனது ஆயுத விற்பனையை வளர்த்துவதற்காக இஸ்ரேல் தீவிரமாக காய்களை நகர்த்தியது.
இதனை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட இலங்கையின் அப்போதைய அதிபர் பிரேமதாசா உடனடியாக இஸ்ரேலுடனான உறவை துண்டித்தார். இலங்கையிலுள்ள இஸ்ரேலின் தூதரகத்தை மூடுவதற்கும் ஏப்ரல் 20 1990இல் உத்தரவிட்டார்.https://www.upi.com/…/Sri-Lanka-to-suspend-r…/6077637909200/ இதன்பின் மெல்ல மெல்ல இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தவர் உச்சபட்சமாக இனி இஸ்ரெலிடமிருந்து ஆயுதம் வாங்குவதில்லை என்ற முடிவை எடுத்தார்.
இந்த முடிவை எடுத்த ஒரு மாததில் மே 01 1993 கொல்லப்பட்டார். இதன்பின் இஸ்ரேலின் ஆயுத வணிகம் இலங்கையில் இன்று வரை கொடிக்கட்டி பறக்கிறது.
இந்த இரண்டு அதிபர் கொலைக்கு நடுவில் நடந்தது தான் இராஜிவ் காந்தி கொலை. 1991க்கு முன் இஸ்ரேலுடன் எந்த பெரிய உறவையும் இந்தியா வைத்துக்கொள்ளவில்லை.
ஆனால் இராஜிவ்காந்தி கொலைக்கு பிறகு காங்கிரஸ் கட்சியால் அப்போது நடைபெற்ற தேர்த்லில் சீட் வழங்கப்படாமல் நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன் என்று ஆந்திராவில் இருக்கும் தந்து திராட்சை தோட்டத்தில் இருந்த நரசிம்மராவை பிரதமராக்கி அப்போது சந்திரசேகர் அவர்களின் கட்சியில் அமைச்சராக இருந்த சுப்ரமணிய சாமியை நரசிம்மராவ் அமைச்சரவையில் சேர்ந்து உலக பொது வர்த்தக் கழகத்தில் கையெழுத்திடும் மிக முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது.
அவரும் அதில் கையெழுத்திட்டு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகை சேர்ந்த முதலாளிகள் இந்தியாவிற்குள் நுழைய அப்போது தான் வழியமைத்துக்கொடுத்தார்.
மேலும் இராஜிவ் கொலை நடக்கும் முன்வரை இந்தியாவிகுள் இஸ்ரேலுக்கு எங்குமே தூதரகம் கிடையாது. 1992இல் தான் தூதரகம் இந்தியாவிற்குள் வந்தது. அதுவும் டெல்லியில் அல்ல மும்பையில். ஒரு வீட்டில் தான் தூதரகம் இயங்கியது அந்த வீடு சுப்ரமணிய சாமியின் வீடு.
அவர் வீட்டின் மாடியில் தான் இஸ்ரேலின் கொடி முதன்முதலில் பறந்தது. மேலும் இஸ்ரேல் முதன் முதலில் தனது நாட்டுக்கு வர விசா கொடுத்ததும் இதே சுப்ரமணிய சாமிக்குதான். பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கேட்டும் விசா தராமல் இருந்த இஸ்ரேல் சு.சாமி கேட்டவுடன் கொடுத்தது. https://timesofindia.indiatimes.com/…/articles…/59438603.cms
அதில் மிகமுக்கியமான விசயம் இராஜிவ் காந்தியின் உயிருக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத்தால் ஆபத்து இருக்கிறதென்று பாலஸ்தீன தலைவர் யாசார் அரபாத் எச்சரிக்கை செய்திருந்தார்.
இதன் அடிப்படையிலேயே இராஜிவ்கொலை தொடர்பாக வெளிநாடுகளின் தலையீட்டை விசாரிக்க ஜெயின் கமிசன் என்ற கமிசன் போடப்பட்டது. இதில் சுப்ரணியசாமியையும் விசாரித்தார்கள். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
ஆக இந்த தெற்காசியாவில் உலகமயம் கொண்டு வரப்பட்ட காலத்தில் நடந்த நாடுகளின் தலைவர்களின் கொலைகள் அனைத்திலும் இஸ்ரேலின் பங்கு இருந்தது என்பது அம்பலமாகியிருக்கிறது. அதேபோல இராஜிவ் காந்தியின் கொலையை யார் செய்தார்கள் என்ற மர்மம் விலக்வேண்டுமென்றால் இஸ்ரெல் உளவாளி சுப்ரமணிய சாமியை பிடித்து விசாரித்தாலே தெரிந்துவிடும்.


-கொண்டல் சாமி-

No comments