ரிசாத்.ஹிஸ்­புல்­லாஹ் வெளியே?


கைத்­தொ­ழில், வாணிப அலு­வல்­கள் அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைச் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக இலங்கை தேசிய மகா சபை­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அத்­து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்­தார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தத் தாக்­கு­த­லைத் தொடர்ந்து அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீனை அத­னு­டன் தொடர்­பு­ப­டுத்தி சிங்­கள அர­சி­யல்­வா­தி­கள் குற்­றம் சுமத்தி வரு­கின்­ற­னர். இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அத்­து­ர­லிய ரத்ன தேரர் குறிப்­பிட்­டுள்­ளார்.
கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே அவர் இந்­தத் தக­வலை வெளிப்­ப­டுத்­தி­னார். மேல் மாகாண ஆளு­னர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளு­னர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்­லாஹ் ஆகி­யோரை ஆளு­னர் பத­வி­யி­ருந்து நீக்­கு­வது தொடர்­பா­க­வும் கவ­னம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் இவர்­களை பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்­கான யோச­னையை புதன்­கி­ழமை அரச தலை­வர் மைத்­தி­ரி­யி­டம் கைய­ளிக்­க­வுள்­ள­தா­க­வும் அவர் இதன்­போது குறிப்­பிட்­டார்.

No comments