வன்முறை தொடர்கிறது - வடமேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

வட மேல் மாகாணத்தில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரும் வரை இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மேல் மாகாணத்தில் உள்ள புத்தளம், குருணாகல் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்தே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments