கிழக்கிலும் நினைவேந்தல்!

வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நினைவு வாரம் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று  திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் முன்னெடுக்கப்படுகின்றன.முள்ளிவாய்க்கால் நினைவு வார நிகழ்வுகள் இதற்கு முன்னர், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தாம் ஒரு வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்த சிவாஜிலிங்கம்,  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக இலங்கை அரசாங்கம் நிறுத்தப்படவேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளை தாம் முன்னெடுத்துவருவதாக கூறியுள்ளார்.
மேலும், இன்று அம்பாறையின் திருக்கோவில் கடற்கரையில் காலை 11 மணிக்கும், மாலையில் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையிலும் இந்நிகழ்வு நடைபெற்றது.
 இறுதி 22ஆவது நிகழ்வாக முள்ளிவாய்க்காலில் காலை 10.30 மணிக்கு நினைகூரல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments