இலங்கை அரசின் கூட்டாக யேர்மனி அரசு!


அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் சாட்சியமென இலங்கை அரசு கூறிவருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அங்கத்தவர் எனக் கூறப்படும் ஒருவருக்கு எதிராக ஜேர்மனிய நீதிமன்றமொன்றில் போர்க் குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

37 வயதான பீ.சிவதீபன் என்பவருக்கே இக்குற்றபபத்திரம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைந்து போராடிய காலத்தில், கைது செய்யப்பட்ட 15 அரச படையினரின் கொலைகள் சம்பந்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பில் அங்கம் வகித்தமை, போர்க் குற்றங்கள், 2 கொலைகள் மற்றும் 11 கொலை முயற்சிகள் முதலான குற்றசச்சாட்டுகள் பீ.சிவதீபன் மீது சுமத்தப்பட்டுள்ளதாக ஜேர்மனிய வழக்குத் தொடுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். 2008 ஆம் ஆண்டு, கைது செய்யப்பட்ட 15 அரச படையினருக்கு அவர் காவலாக இருந்தார் எனவும், பின்னர், அவர்களின் சடலங்களை எரிப்பதற்கு உதவியளித்தார் எனவும் வழக்குத்தொடுநர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

No comments