பதுங்கியிருக்கும் 19 தீவிரவாதிகள்! தமிழகத்தில் தாக்குதல் எச்சரிக்கை!

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து தீவிர கண்காணிப்புக்கு கீழ் காவல்துறையினர் கொண்டுவந்துள்ளனர்.

ராமநாதபுரம் பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து, தொடரூந்து பாலம், பாம்பன் வீதி பாலம் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

 அதேவேளை  தமிழகத்தில் குண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக எங்களுக்கு வாகன ஓட்டுநர் சுவாமி சுந்தர் என்பவர் அளித்த தொலைபேசி தகவலில் தாக்குதல் குறித்து தமிழக காவல்துறையினருக்கு பெங்களூரு காவல்துறையினர் எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி பாதுகாப்பு தரப்புக்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் தொடரூந்து நிலையங்கள், கோவில்கள், தேவாலயங்கள் என மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments