39 வயதில் 44 பிள்ளைகள்! ஓர் தாயின் பரிதாப நிலை!

உகாண்டா நாட்டில் வசிக்கும் மரியம் நபடன்ஸிக்கு39 வயதாகின்றது அனால் அவருக்கோ 44 குழந்தைகள் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

12வது வயதில் திருமணம் செய்துகொண்ட அவர்
6 பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள்
4 முறை ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்
5 முறை ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் என பெற்றெடுத்துள்ளார்.அதில் 6 குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

முதல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தவுடன் மரியம் மருத்துவரைப் பார்க்கச் அனுக்கியிருக்கிறார் எனினும் கருப்பைகள் பெரிதாக இருந்ததால், கருத்தடை மாத்திரைகள் சாப்பிட்டால் உடல்நலப் பிரச்சினைகள் வரலாம் என்று மருத்துவர் கூறினார்.

 3 வருடங்களுக்கு முன் மரியமை அவரின் கணவர்
கைவிட்டுச் சென்றநிலையில் தனது 38 குழந்தைகளை தனி ஆளாக வளர்க்க பல வேலைகள் செய்வதாகவும்
அதிலிருந்து வரும் சிறிதளவு பணம் பிள்ளைகளின் அடிப்படை தேவைகளுக்கே சரியாகப் போய்விடுகிறது என்று சோகத்தோடு கூறியிருக்கிறார்

No comments