நுவரெலியாவில் 198 டென்டனேட்டர்கள் மீட்பு!

நுவரெலியா ஹெவெளிய மஹிந்த மாவத்தை பகுதியில் கால்வாய் ஒன்றில் இருந்து 198 டெட்டனேட்டர்கள் மீட்கபட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் குறித்த டெட்டனேட்டர்கள் மீட்கபட்டுள்ளது.

காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போது பிரதேச மக்களால் குறித்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் பொதி ஒன்று கிடப்பதாக தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொதியினை மீட்டு பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த பொதியில் 198 நடத்தியபோது இவை கண்டுபிடிக்கப்பட்டது.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பொதியினை மீட்டு பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த பொதியில் 198 டெட்டனேட்டர்கள் இனங்காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யபடவில்லை எனவும்  மற்றும் இரானுவத்தினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments