வட்டுவாகல் பாலம் அருகில் போராட்டம்! பேரணியும் முன்னெடுப்பு!

இறுதி யத்தத்தின்போது உறவுகளை கைளித்த இடமான வட்டுவால் பாலத்தை நோக்கி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து , வலிந்து காணாமலாக்கப்பட்டோரின்
உறவினர்களின் இன்று ஞாயிறுக்கிழமை காலை போராட்டம் மற்றும் பேரணியை நடத்தியுள்ளனர்.

மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக உறவுகளைக் கையளித்த வட்டுவால் பாலத்தில் முடிவடைந்துள்ளது.

வட்டுவாகலில் கையளித்த எமது உறவுகள் எங்கே? இராணுவத்தினரின் கையில் கொடுத்த என் அப்பா எங்கே? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு பலர் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி, இலங்கையுடன் சேர்ந்து சர்வதேசமும் தம்மை ஏமாற்றியுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கூட்டமைப்பும் அரசிற்கு விலைபோயுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தம்மை ஏமாற்றிய அரசாங்கம், சர்வதேசம், கூட்டமைப்பு என அனைத்து தரப்பினருக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில் உறவுகளைத் தொலைத்தவர்கள், பொியவர்கள், இளைஞர்கள் குழந்தைகளென பலரும் கலந்துகொண்டனர்.

#வட்டுவாகல் #Vadduvakal #Mullitivu #Protest



No comments