வானூர்தி நிலையத்தில் 39 விசா நிவாரணம் ரத்து!

எதிர்வரும் மாதம் 1ம் திகதி முதல் 39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப் படவிருந்த விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
குடிவரவு , குடியகல்வு கட்டுபாட்டாளர் நாயகம் பசன் ரத்நாயக்க  தெரிவித்தார்.

அதன்படி , வௌிநாட்டு நபர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னர் விசாவினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்டிருந்த புதிய முறைமை ஊடாக விமான நிலையத்திலேயே விசாவினை பெற்றுக் கொண்டு நாட்டினுள் பிரவேசிக்க வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் , அதனை மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

No comments