சீனத்தூதர் அழைத்தால் சந்திக்க தயார்:முன்னணி?


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சீனத் தூதுவரை சந்தித்ததாக வெளியிடப்பட்டு;ள்ள செய்தியினை அதன் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மறுதலித்துள்ளார்.இது தொடர்பில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது எனவும் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சீனத் தரப்பினரை இரகசியமாகச் சந்தித்தது என உண்மைக்குப் புறம்பான கருத்தொன்றைக் முன்னாள் முதலமைச்சர் கூறியிருக்கின்றார். அது தொடர்பாக எங்களது ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறோமென கஜேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

எங்களைப் பொறுத்தவரை எந்தவொரு இராஜதந்திரியும் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டால் நாங்கள் அவர்களைச் சந்திப்போம். எங்களுக்கு யாரைச் சந்திப்பதிலும் எந்தவிதமான தயக்கமும் இல்லை. பயமும் இல்லை. யாரைச் சந்தித்தாலும் அதனை வெளிப்படுத்துவதிலும் எங்களுக்கு எந்தவிதமான தயக்கங்களும் இல்லை. இதுவரை இந்தியத் தூதர்களையும் ஐரோப்பியத் தூதர்களையும் பல தடவைகள் சந்தித்திருக்கிறோம். ஆனால், இதுவரை சீனாத் தூதுவர்களைச் சந்திக்கவில்லை. ஆயினும், எதிர்காலத்தில் அவர்களும் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பிச் சந்திக்க அழைப்புவிடுத்தால் நிச்சயமாக நாங்கள் சந்திப்போமெனவும் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments