கூட்டமைப்பின் காதில் பூ: யாழில் பேச்சுவார்த்தையாம்!


வடகிழக்கில் மீண்டும் முப்படைகளிற்கான காணி பிடிப்பு தொடர்பில் மைத்திரி,ரணில் மட்டத்தில் நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்ததையடுத்து கூட்டமைப்பு இராணுவ மட்டத்திற்கு பேச்சுக்களிற்கு இறங்கிவந்துள்ளது.முப்படைகளிற்குமான காணி பிடிப்பு தொடர்பில் மைத்திரி மற்றும் ரணில் மட்டத்தில் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்த போதும் அவர்கள் கூட்டமைப்பினரது கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை.மைத்திரியோ இன்னொரு படி சென்று நாய்கள் போன்று கத்தவேண்டாமென கூட்டமைப்பினரை திட்டியிருந்தார்.

இந்நிலையில் ரணில் அரசிற்கு முண்டுகொடுத்தவாறு கூட்டமைப்பினர் ஆடும் நாடகம் மக்களிடையே சீற்றத்தை தந்துள்ளது.

நேற்று மண்டைதீவு பகுதியில் கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட நில சுவீகரிப்பு போராட்டத்தில் ரெலோ தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனைய தரப்புக்கள் பங்கெடுத்திருக்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் தமிழ் மக்கள் காதில் பூவைக்க வடக்கில் படையினர் தேவைக்காக சுவீகரிக்க திட்டமிட்ட நிலங்கள் தொடர்பில் எதிர் வரும் 29ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதன் பிரகாரம் மன்டைதீவு உட்பட யாழில் மட்டும் 45 இடங்களில் படையினருக்கு நிலம் சுவீகரிக்க எடுக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

No comments